ஸ்ரீ மாத்ரே நமஹ
தீப ஸ்லோகம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சத்ய சந்திரவதனே
நித்திய ஸ்வரூப ஹார சாந்நித்ய மங்களே
பாபாந்தகார பவ பஞ்சன பிரத்யக்ஷ தேவி
மனோபாவ சம்பூர்ணாநந்த ஜாஜ்வல்ய ஜோதி ஸ்வரூபே
சகல லோகமும் ஏக மெய் ஜோதியே
முக்குணமும் தந்த முடியான ஜோதியே
எக்காலம் ஒளிவீசும் இன்பம மெய் ஜோதியே
தீப மத்தியஸ்த துல்ய மெய் ஜோதியே
பாப சம்ஹார பரமானந்த ஜோதியே
நாசி முனை நின்ற திருவான மெய் ஜோதியே
மாசிலா மாதோங்கி வளரும் மெய்ஞான ஜோதியே
நீங்காத நடுநிலைமை நின்ற மெய் ஜோதியே
முக்கண் முக்கோடி முடி தொழும் ஜோதியே
எப்போதும் என் முன் வந்து நிற்கும் சின்மயி ஜோதியே
திரேதாக்னியாக திரண்ட மெய்ஞ்ஞான ஜோதியே
குரோதாதி மோகங்கள் கொளுத்தும் மெய் ஜோதியே
ஹோமச் சுடர்வீசும் எழுந்து ஓங்கும் ஜோதியே
என்னாளும் அணையாத அகண்ட மெய் தீபமே
சந்தியா காலத்தில் செழித்து ஓங்கும் தீபமே
சகல சௌபாக்கியம் தந்து அருளும் சத்குரு தீபமே
அந்தாகாரங்களை அளித்து ஓங்கும் மெய் தீபமே
காஞ்சி மாபுரிவாள் காமகோடி நித்ய தீபமே
தில்லையில் வாழ்கின்ற சிவகாமி தீபமே
எல்லைப் பிடாரியாய் எங்கும் எரி தீபமே
அண்ணாமலை வளர் அருணகிரி தீபமே
உண்ணாமுலையாக ஓங்கும் மெய் தீபமே
மயிலை நகர் தன்னில் மணக்கும் மெய் தீபமே
மதுரையில் விளையாடும் மீனாட்சி தீபமே
காசி ஸ்ரீ விஸ்வேஸ்வரர் களிக்கும் மெய் தீபமே
கோமதி கௌரி கௌமாரி தீபமே
திரிபுராதியாசுரர் துதித்த மெய் தீபமே
பிரக்ருதி மாயா விலாச மெய் தீபமே
பெண்களுக்கு அணியான பதிவிரதா தீபமே
கண்காட்சி ஆனதொரு களித்த மெய் தீபமே
காளஹஸ்தியில் வாழும் ஞானாம்பாள் தீபமே
கண்ணப்பன் கண்டு களித்த மெய் தீபமே
பூத தேகத்தை பொசுக்கும் மெய் தீபமே
வேதனை அகற்றும் மெய்ஞான தீபமே
காலனை காலால் உதைத்த மெய் தீபமே
பால மார்க்கண்டனை காத்த மெய் தீபமே
லக்ஷ்மி பராசக்தி ஆன மெய் தீபமே
பட்சமாய் இக்ஷனம் போற்றினேன் தீபமே
கஷ்டங்கள் வராமல் காக்கும் மெய் தீபமே
இஷ்ட தேவதை என்று நான் ஏற்றினேன் தீபமே
என்னாளும் அழியாத செல்வம் தரும் தீபமே
எம பாதை இல்லாமல் காக்கும் மெய் தீபமே
சுந்தரி மனோகரி சுதந்தரி தீபமே
தட்சணம் வந்து காக்கும் தாட்சாயணி தீபமே
பட்சமாய் அனாகத்தில் வாழும் ஸ்ரீ பரப்ரும்ம ஸ்வரூபிணி தீபமே
மனோபாவ சம்பூர்ணானந்த ஜாஜ்வல்ய ஜோதி ஸ்வரூபே
மங்களம் ஜெய மங்களம் நித்ய மங்களம் சுப மங்களம்
Click the link below to listen the sloka
https://youtu.be/ie_QtUg9DIA
Or visit the link below on YouTube to watch the video