Sri Mathre namaha:
விநாயகர் பாட்டு
பல்லவி
அனுகிரகம் செய்ய வாரும்-ஆனை முகா
அனுகிரகம் செய்ய வாரும்
அனுபல்லவி
சனிக்ரஹம் அனுகா ஸர்வானுக்ரஹ
வினை விக்ரஹம் செய்யும் வேழ முகத்தனே. (அனு)
சரணம்
ஔவைக்கு ஞானகுரு ஆகிய கணநாதா
அரை நொடியில் கயிலை சேர்த்தருள் திருப்பாதா
மூவுலகும் துதிக்கும் முதற்பொருள் ஆனவனே
மோதகம் விரும்பிடும் மூஷிக வாகனனே. (அனு)
வேலவன் வேண்டிடவே வேழவுருக் கொண்டாய்
விரும்பிய வள்ளியை மணமுடித்து தந்தாய்
மாலவன் தோர்பிகர்ணம் போட மகிழ்வுடனே
மறுபடியும் சக்கரம் பெறவே அருள் புரிந்தார்
(அனு)
To listen the song pls see the video below
My father L.Subramanian has sung the song also.
pls click and select the link below to open the youtube video to listen .
https://youtu.be/dBSBLjSp69M
No comments:
Post a Comment